அரசுக்கெதிரான போராட்டங்கள் இலங்கையில் மாத்திரமல்லாமல் உலகளாவிய ரீதியில் இலங்கையர்கள் வாழும் பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட சிங்கள பாடகி ஒருவர் பொதுமக்களின் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார்.
பிரபல சிங்கள பாடகியான சஞ்சீவனி வீரசிங்க என்பவர் பொதுமக்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டத்தை கைவிடுமாறு கோரியுள்ளார். இதன்போது ஆத்திரமடைந்த இலங்கையர்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியை பதவிக்கு கொண்டுவருவதற்கு சஞ்சீவனி வீரசிங்கவும் முக்கிய பங்காற்றியதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஞ்ஜீவனி வீரசிங்க, கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக நாட்டின் அனைத்து இடங்களிலும் பிரசாரம் செய்து வந்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச முன்வைத்த பெண்களுக்கு சுகாதார நெப்பின்களை வழங்குவது தொடர்பான யோசனையை கடுமையாக விமர்சித்து இருந்தார். ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் அவருக்கு அரச ஊடக நிறுவனம் ஒன்றில் பதவி வழங்கப்பட்டது.