சட்டவிரோதமாக கேரளாவுக்கு ஆற்று மணல் கடத்தப்பட்ட வழக்கு.. கனிம வளத்துறை உதவி இயக்குனரை கைது செய்த சிபிசிஐடி போலீசார்

நெல்லையில் எம்.சாண்ட் குவாரிக்கு அனுமதி பெற்று சட்டவிரோதமாக கேரளாவுக்கு ஆற்று மணல் கடத்திய வழக்கில், கனிம வளத்துறை பெண் உதவி இயக்குநர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2019ம் ஆண்டு பொட்டல் கிராமத்தில் கேரள பிஷப் ஒருவருக்கு சொந்தமான எம்.சாண்ட் நிறுவனத்தில் இருந்து ஆற்று மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது.

சுமார் 27 ஆயிரம் கியூபிக் மீட்டர் அளவிலான ஆற்று மணல் கேரளாவுக்கு கடத்தப்பட்டது தெரிய வந்ததை அடுத்து வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

வழக்கில் தொடர்புடைய கேரள பிஷப், 5 பாதிரியார்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சிபிசிஐடியின் தொடர் விசாரணையில், அப்போதைய நெல்லை மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனராக இருந்த சபியா என்பவர் மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

சபியா தற்போது நீலகிரி மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குனராக உள்ள நிலையில், அவரது வீட்டில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.