ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சர்ச்சைக்குரிய எல்பிடபிள்யூ முடிவிற்குப் பிறகு ஆர்.சி.பி வீரர் விராட் கோலி கோபத்துடன் வெளியேறிய வீடியோ வெளியாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் – பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் வெற்றியை நெருங்கும் தருணத்தில் 48 ரன்களில் விளையாடி கொண்டிருந்த விராட் கோலி சர்ச்சைக்குரிய எல்பிடபிள்யூ பந்தில் அவுட்டானார்.
my god😭 he’s so angry pic.twitter.com/v0oZokSs40
— // Tsitsipas thinker (@tanyadiors) April 9, 2022
அதன்படி டிவால்ட் ப்ரீவீஸ் பந்துவீச்சில் கோலி பேடில் பந்து பட்டு அவுட் தரப்பட்டது.
இதையடுத்து கோலி டிஆர்எஸ்-ஐ தேவு செய்தார், அதில் பந்து மட்டையை நெருங்கியது போல் தோன்றியது, ஆனாலும் முடிவு அவருக்கு எதிராக சென்றது.
இதையடுத்து அவுட்டான கடுப்பில் பேட்டை தரை வேகமாக அடித்தப்படி கத்திக்கொண்டே பெவிலியனுக்கு கோலி திரும்பினார்.