சிங்கார சென்னை 2. 0 திட்டத்தின் கீழ், புதிய நீரூற்றுகள், எல்இடி விளக்குகள் மற்றும் டிஜிட்டல் பெயர்ப் பலகைகள் ஆகியவற்றுடன், நகரத்தை புதிய பொலிவுடன் மாற்றியமைக்கப்படவுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 23 கோடி ரூபாயில், ரூ1.81 கோடி ரிப்பன் கட்டிடங்களுக்கு டைனமிக் லைட்டிங் அமைக்க செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய மேயர் ஆர் பிரியா ராஜன், திருவிழாக்கள் மற்றும் தேசிய நிகழ்வுகளின் போது, நிரந்தர எல்இடி விளக்கு அமைப்பு பாரம்பரிய கட்டமைப்பை வண்ணமயமாக்க உதவும்.
ராஜாஜி சாலை-என்எஸ்சி போஸ் சாலை இணைப்பு, டாக்டர் பெசன்ட் சாலை, ஆற்காடு சாலை உள்ளிட்ட 26 இடங்களில் ரூ1.29 கோடி மதிப்பில் நீரூற்றுகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நீரூற்றுகள் மாலை நேரங்களில் மட்டும் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பேசிய அவர், 4,681 இடங்களில் உள்ள பெயர் பலகைகள் 8 கோடி ரூபாய் செலவில் டிஜிட்டல் பெயர்பலகைகளாக மாற்றப்படவுள்ளது. அனைத்து பெயர் பலகைகளும் டிஜிட்டல் முறையில் அச்சிடப்பட்டு, விவரங்கள் விளக்குகளில் நன்றாக பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என்றார்.
இதுதவிரமாற்றுத்திறனாளிகளுக்காக கடற்கரையில் நிரந்தர பாதை அமைக்கும் பணிக்கு ரூ.1.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை மாநகர் முழுவதும் 2,50,000 மரக்கன்றுகளை நடவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு நல சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இதை அடைவோம் எனக் கூறிய பிரியா, மரக்கன்றுகள் நடுவதற்கு OSR நிலங்கள் மற்றும் அடையாறு மற்றும் கூவம் ஆற்றங்கரை பகுதிகளை மாநகராட்சி அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்தார்.