புதுடெல்லி:
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ராமநவமியை முன்னிட்டு சில நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் உள்ள இரு குழுக்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். காயமடைந்த நபர்கள் ஆம்புலன்சில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். போலீசார் அங்கு நிலைமையை கவனித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவர் மற்றும் பிஹெச்.டி மாணவியான சரிகா கூறுகையில், அசைவ உணவு சாப்பிடுவதில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஏபிவிபி அமைப்பினர் அசைவ உணவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தடை விதிக்க முற்பட்டனர். இதற்கு பிற மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மோதலில் பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்தார்.