சர்வதேச சந்தையில் அமெரிக்காவின் வட்டி விகித உயர்வின் வாயிலாக அனைத்து முதலீடுகளும் பத்திர சந்தையிலும், பங்குச் சந்தையிலும் குவியத் துவங்கியதால் தங்கத்திற்கு டிமாண்ட் பெரிய அளவில் குறைந்தது.
ஆனால் இந்தியாவில் திருமணக் காலம் துவங்க உள்ள நிலையில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைவாக இருந்த நிலையில், இந்தியாவில் அதிகரிக்கத் துவங்கியது.
ஆனால் வெள்ளிக்கிழமை முக்கியமான கணிப்புக் காரணமாகத் தங்கத்திற்கு மீண்டும் டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் விலை இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
கிடுகிடுவென அதிகரிக்கும் தங்கம் விலை.. சாமானியர்கள் பெரும் கவலை..!
ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை
சர்வதேச முதலீட்டு சந்தையை அதிகளவில் பாதித்து வந்த ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை தற்போது தணிந்துள்ளது, இதனால் பணவீக்கத்தையும், சப்ளை செயின் பிரச்சனைகளையும் விரைவில் கட்டுப்படுத்தியாக வேண்டிய சூழ்நிலை அனைத்து நாடுகளுக்கும் உள்ளது.
ரெசிஷன் எச்சரிக்கை
இந்தச் சூழ்நிலையில், அமெரிக்கா விரைவில் மிகப்பெரிய ரெசிஷன் நிலையைச் சந்திக்கும் எனப் பல வால் ஸ்ட்ரீட் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் பெடரல் வங்கி விலைவாசியைப் பெரிய அளவில் வட்டி விகிதத்தைச் சீர்திருத்தம் செய்தால் மட்டுமே சாதிக்க முடியும், இல்லையெனில் கட்டாயம் விலைவாசியைக் கட்டாயம் குறைக்க முடியாது.
கடன் நெருக்கடி
இதேவேளையில் வட்டி விகிதத்தைத் தடலாடியாக உயர்த்தினால் பல வர்த்தகத் துறை அதிகப்படியான கடன் நெருக்கடிக்குத் தள்ளப்படும். இதனால் வர்த்தகச் சந்தையில் ரெசிஷன் உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த நிலையைச் சமாளிக்க முதலீட்டாளர்கள் இப்போதே தங்கம் மீது முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.
தங்கம் விலை உயர்வு
இதனால் புதன்கிழமை வரையில் சரிந்து வந்த சர்வதேச தங்கம் விலை, வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1947.55 டாலராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் திங்கட்கிழமை வர்த்தகத்தில் குறைந்தது 0.05 சதவீதம் முதல் 1 சதவீதம் வரையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
MCX சந்தை
MCX சந்தையின் வர்த்தக முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.39 சதவீதம் அதிகரித்து 52,099 ரூபாயாகவும், வெள்ளி விலை ஒரு கிலோ 0.40 சதவீதம் அதிகரித்து 67,032.00 ரூபாயாக உள்ளது. வால் ஸ்ட்ரீட் வல்லுனர்களின் ரெசிஷன் கணிப்புத் தங்கம் விலை உயர்வில் பெரும் பங்கு வகிக்க உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் விலை
- சென்னை – 49,190 ரூபாய்
- மும்பை – 48,600 ரூபாய்
- டெல்லி – 48,600 ரூபாய்
- கொல்கத்தா – 48,600 ரூபாய்
- பெங்களூர் – 48,600 ரூபாய்
- ஹைதராபாத் – 48,600 ரூபாய்
- கேரளா – 48,600 ரூபாய்
- புனே – 48,700 ரூபாய்
- வதோதரா – 48,700 ரூபாய்
- அகமதாபாத் – 48,650 ரூபாய்
- ஜெய்ப்பூர் – 48,750 ரூபாய்
- லக்னோ – 48,750 ரூபாய்
- கோயம்புத்தூர் – 49,190 ரூபாய்
- மதுரை – 49,190 ரூபாய்
- விஜயவாடா – 48,600 ரூபாய்
- பாட்னா – 48,700 ரூபாய்
- நாக்பூர் – 48,700 ரூபாய்
- சண்டிகர் – 48,750 ரூபாய்
- சூரத் – 48,650 ரூபாய்
- புவனேஸ்வர் – 48,600 ரூபாய்
- மங்களூர் – 48,600 ரூபாய்
- விசாகப்பட்டினம் – 48,600 ரூபாய்
- நாசிக் – 48,700 ரூபாய்
- மைசூர் – 48,600 ரூபாய்
10 கிராம் 24 கேரட் தங்கம் விலை
- சென்னை – 53,660 ரூபாய்
- மும்பை – 53,020 ரூபாய்
- டெல்லி – 53,020 ரூபாய்
- கொல்கத்தா – 53,020 ரூபாய்
- பெங்களூர் – 53,020 ரூபாய்
- ஹைதராபாத் – 53,020 ரூபாய்
- கேரளா – 53,020 ரூபாய்
- புனே – 53,120 ரூபாய்
- வதோதரா – 53,120 ரூபாய்
- அகமதாபாத் – 53,070 ரூபாய்
- ஜெய்ப்பூர் – 53,170 ரூபாய்
- லக்னோ – 53,170 ரூபாய்
- கோயம்புத்தூர் – 53,660 ரூபாய்
- மதுரை – 53,660 ரூபாய்
- விஜயவாடா – 53,020 ரூபாய்
- பாட்னா – 53,120 ரூபாய்
- நாக்பூர் – 53,120 ரூபாய்
- சண்டிகர் – 53,170 ரூபாய்
- சூரத் – 53,070 ரூபாய்
- புவனேஸ்வர் – 53,020 ரூபாய்
- மங்களூர் – 53,020 ரூபாய்
- விசாகப்பட்டினம் – 53,020 ரூபாய்
- நாசிக் – 53,120 ரூபாய்
- மைசூர் – 53,020 ரூபாய்
வெள்ளி விலை
- சென்னை – 67000 ரூபாய்
- மும்பை – 71500 ரூபாய்
- டெல்லி – 67000 ரூபாய்
- கொல்கத்தா – 67000 ரூபாய்
- பெங்களூர் – 71500 ரூபாய்
- ஹைதராபாத் – 71500 ரூபாய்
- கேரளா – 71500 ரூபாய்
- புனே – 67000 ரூபாய்
- வதோதரா – 67000 ரூபாய்
- அகமதாபாத் – 67000 ரூபாய்
- ஜெய்ப்பூர் – 67000 ரூபாய்
- லக்னோ – 67000 ரூபாய்
- கோயம்புத்தூர் – 67000 ரூபாய்
- மதுரை – 67000 ரூபாய்
- விஜயவாடா – 71500 ரூபாய்
- பாட்னா – 67000 ரூபாய்
- நாக்பூர் – 67000 ரூபாய்
- சண்டிகர் – 67000 ரூபாய்
- சூரத் – 67000 ரூபாய்
- புவனேஸ்வர் – 67000 ரூபாய்
- மங்களூர் – 71500 ரூபாய்
- விசாகப்பட்டினம் – 71500 ரூபாய்
- நாசிக் – 67000 ரூபாய்
- மைசூர் – 71500 ரூபாய்
Gold price prediction: US under growing fear of recession; Check price in Chennai, coimbatore
Gold price prediction: US under growing fear of recession; Check price in Chennai, Coimbatore தங்கம் விலை தொடர் உயர்வு.. என்ன காரணம்..?