பெங்களூரு : பொது மக்கள் கவனக்குறைவாக, தண்டவாளங்களை கடப்பதை தடுக்க, தென் மேற்கு ரயில்வே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.இது குறித்து, தென் மேற்கு ரயில்வே பிரிவு முதன்மை நிர்வாகி சஞ்சீவ் கிஷோர் கூறியதாவது:ரயில் தண்டவாளங்களை தாண்டும் போது, ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கில், விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
பெங்களூரின் சங்கொள்ளி ராயண்ணா ரயில் நிலையம், ஹூப்பள்ளியின் சித்தரூட ரயில் நிலையம், மைசூரு ரயில் நிலையத்தில் பெரிய பலகைகள் பொருத்தப்பட்டுள்ளது.இதில் பொதுமக்கள் கையெழுத்திடுவதன் மூலம், ‘ரயில் தண்டவாளத்தை தாண்டுவதில்லை. தண்டவாளம் அருகில் நடமாடும் போது, ஹெட் போன் பயன்படுத்துவதில்லை’ என உறுதி மொழி ஏற்க வேண்டும்.இது தொடர்பாக ரயில்வேத்துறை சமூக வலைதளங்கள், ரயில் நிலையங்களில் போஸ்டர் பயன்படுத்தி பிரசாரம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு : பொது மக்கள் கவனக்குறைவாக, தண்டவாளங்களை கடப்பதை தடுக்க, தென் மேற்கு ரயில்வே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.இது குறித்து, தென் மேற்கு ரயில்வே பிரிவு முதன்மை நிர்வாகி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.