திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடந்து வருகிறது.
மாநாட்டில் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று பங்கேற்று பேசினார். அப்போது அவர் மலையாளத்தில் தொடங்கி தமிழில் பேசி ஆங்கிலத்தில் தனது உரையை நிறைவு செய்தார். மும்மொழிகளில் பேசிய மு.க. ஸ்டாலினின் பேச்சுக்கு தொண்டர்கள் கரவொலி எழுப்பி பாராட்டு தெரிவித்தனர்.
அதற்கேற்ப அவர் மாநிலங்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும், அதற்கு நாம் இணைந்து செயல்பட வேண்டும் என பேசினார்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவை எதிர்க்க வலுவான கூட்டணி அமைக்க வேண்டியது அவசியம். இதற்கான நடவடிக்கைகள் மாநில அளவில் தொடங்கப்பட வேண்டும். அந்த வகையில் தமிழகத்தில் தற்போது ஒத்த கருத்துடைய தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி அமைத்துள்ளது.
மத்திய அரசை எதிர்க்க இதுபோன்ற கூட்டணி அவசியமாகிறது. இதற்காக தமிழகத்தை போல கேரளாவிலும் காங்கிரசுடன் இணைந்து போராட தயாராக உள்ளோம்.
காங்கிரசை ஒதுக்கி வைத்துவிட்டு தேசிய அளவில் கூட்டணி அமைக்கமுடியாது, என்றார்.