கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த 42வது வயது பெண் ஒருவர் சித்த மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று கோகுலம் காலனி பகுதியில் நடைபயிற்சி மேற் கொண்டிருந்தார்.
அப்போது அவர் என் பின்னால் வந்த சிறுவன் ஒருவன் திடீரென அவரின் துப்பட்டாவை பிடித்து இழுத்து, அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மருத்துவர் கத்தி கூச்சலிட்டு உள்ளார். பெண் மருத்துவரின் அபயக்குரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே, அந்த சிறுவன் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளான்.
இதுகுறித்து பெண் மருத்துவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் அந்த சிறுவனின் அடையாளம் வைத்து அந்த சிறுவன் அதே பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவி என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த சிறுவனை கைது செய்த போலீசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
கோவையில் பெண் மருத்துவரிடம் பள்ளி மாணவன் தவறாக நடக்க முயன்ற சம்பவம் பெண்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.