இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி), பாதுபாப்பான முதலீடு மட்டுமின்றி பாலிசிதாரர்களுக்கு முதிர்ச்சி காலத்தை நிரந்தர வருமானத்தை அளிக்கிறது. இந்தியர்களுக்குப் பணத்தைச் சேமிப்பதற்கான ஒரு பிரபலமான விருப்பமாக எல்ஐசி திட்டங்கள் திகழ்கின்றன.
அதிலிருக்கும் எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம் என்பது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான உத்தரவாத திட்டமாகும். இந்த திட்டத்தில் தினமும் 29 ரூபாய் முதலீடு செய்துவந்தால், நிச்சயத்தொகையாக ரூ4 லட்சத்தை பெற முடியும்.
எல்ஐசி ஆதார் ஷீலா திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ. 75 ஆயிரம் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் வரை ஒருவரால் இந்த எல்.சி. ஆதார் ஷீலா திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தின் குறைந்தபட்ச மெச்சூரிட்டி காலம் 10 ஆண்டுகள். அதிகபட்சமாக ஒருவர் 20 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். ஒருவர் ப்ரீமியத்தை மாதம் ஒருமுறை அல்லது காலாண்டுக்கு ஒரு முறை அல்லது அரையாண்டுக்கு ஒருமுறை செலுத்தலாம்.
உதாரணமாக, நீங்கள் தினமும் ரூ29 செலுத்தி வந்தால், ஆண்டிற்கு மொத்தமாக 10 ஆயிரத்து 959 ரூபாய் முதலீடு தொகையாக செலுத்தியுள்ளனர். இதே பிராசஸை, 20 ஆண்டுகளுக்கு தொடர்கீறிர்கள் என வைத்துகொள்வோம். அதன்படி, 30 வயதில் நீங்கள் இந்த திட்டத்தை தொடர்ந்தால், தினமும் 4 ரூபாயை 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால், மொத்த முதலீட்டு தொகை ரூ2 லட்சத்து 14 ஆயிரத்து 696 ஆகும். ஆனால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு 3 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் கிடைத்திடும்.
இந்த திட்டத்தில் 8 முதல் 55 வயதுள்ள பெண்களால் முதலீடு செய்ய இயலும். எல்ஐசியின் இணையதளத்தின்படி, இந்த திட்டம் சாதாரண மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழ்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு எந்த மருத்துவ பரிசோதனையும் தேவையில்லை
இந்த திட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் கடன் வாங்கலாம். முதல் செலுத்தப்படாத பிரீமியத்தின் 2 வருடங்களுக்குள் காலாவதியான பாலிசியை நீங்கள் புதுப்பிக்கலாம்.
எல்ஐசி ஆதார் ஷீலா திட்டம் பிரிவு 80 சி கீழ் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதிர்வு தொகை பிரிவு 10 (10D) இன் கீழ் வரி இல்லாதது