பொதுவாக பலரையும் வாட்டக்கூடிய நோய் தான் சர்க்கரை நோய் இரண்டாம் இடத்தில் உள்ளது.
தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய் என்று இதனை கூறலாம்.
இதனை ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது.
இல்லாவிடின் உயிர் ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றது.
அதில் சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இப்படி செய்து தங்கள் சர்க்கரை அளவை அவர்கள் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
குறிப்பாக ஒரு சில உணவுகளை எடுப்பதை முற்றாக தவிர்க்க வேண்டும்.
தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.
- நீரிழிவு நோயாளிகள் பேரீச்சம்பழம் அல்லது கஜூர் ஆகியவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில்
பேரீச்சம்பழத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. - நீரிழிவு நோயாளிகள் உலர் திராட்சையை உட்கொள்ளக்கூடாது. இதில் குளுக்கோஸ் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக உடலில் குளுக்கோஸின் அளவு கணிசமாக அதிகரிக்கிறது.
- நீங்கள் வெள்ளை ரொட்டியை தவிர்ப்பது நல்லது. நீரிழிவு நோயாளிகள் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவை உண்ணக் கூடாது.
- சர்க்கரை நோயாளிகள் பழங்களில் சப்போட்டா பழத்தை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அதன் கிளைசெமிக் குறியீடும் மிக அதிகமாக உள்ளது. எனவே, சர்க்கரை நோயாளிகள் சப்போட்டா பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- நீரிழிவு நோயாளிகள் உருளைக்கிழங்கையும் மிகக் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். அதிக உருளைக்கிழங்கு சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.