பனகல் பூங்காவை கிழித்துச் செல்லும் மெட்ரோ: 3000 ச.மீ ஒப்படைக்க சென்னை மாநகராட்சி ஒப்புதல்

Chennai corporation handed over Panagal park to CMRL for Metro project: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக பனகல் பூங்கா இடத்தை பயன்படுத்திக் கொள்ள சென்னை மாநகராட்சி அனுமதியளித்துள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்காக தி.நகரின் முக்கிய இடமான பனகல் பூங்காவை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் தீர்மானத்தை சென்னை மாநகராட்சி கவுன்சில் சனிக்கிழமை நிறைவேற்றியது.

பனகல் பூங்காவில் உள்ள 323 சதுர மீட்டர் நிலத்தை ரூ.3.72 கோடி செலுத்தி, மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்துக் கொள்ள சென்னை மாநகராட்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. அதேநேரம் பூங்காவில் மொத்தம் 3,069 சதுர மீட்டர் நிலம் மெட்ரோ பணிக்காக பயன்படுத்தப்பட்டு, பணிகள் முடிந்த பின் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படும்.

இதையும் படியுங்கள்: சென்னையில் புதிய அட்ராக்ஷன்: ட்வின் டவர் எங்கு அமைகிறது தெரியுமா?

பனகல் பூங்கா 19,434 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் மெட்ரோ திட்டத்திற்காக 6,911 சதுர மீட்டர் நிலத்தை மெட்ரோ நிர்வாகம் சென்னை மாநகராட்சியிடம் கோரியிருந்தது. ஆனால், தற்போதுள்ள விதிகள் பூங்கா பகுதியில் 5% மட்டுமே கட்டுமானத்தை அனுமதிக்கின்றன.

அதேநேரம் சென்னையின் சிறந்த போக்குவரத்துக்கு மெட்ரோ திட்டம் இன்றியமையாததாக இருப்பதால், பனகல் பூங்காவில் உள்ள 87 மரங்களை வெட்டவும், 893 சதுர மீட்டர் நடைபாதை மற்றும் 93 மீ சுவரை இடிக்கவும் மெட்ரோ நிர்வாகத்திற்கு சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

இதேபோல், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான ஆற்காடு ரோடு மற்றும் புலியூர் பகுதிகளில் கடைகள் மற்றும் நடைபாதை, விருகம்பாக்கத்தில் உள்ள திறந்தவெளி இருப்பு நிலம் ஆகியவை மெட்ரோ ரயில் நிர்வாகம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஓஎம்ஆர் சாலையில் உள்ள மாநகராட்சி நிலம் மெட்ரோ திட்டத்திற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.