கொரோனா காரணமாக நடைமுறையில் இருந்த பொதுமுடக்கம், ஏற்றுமதி பாதிப்பு, உள்நாட்டு சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி போன்ற காரணங்கள் தொழில் நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முழுவீச்சில் இயங்கவில்லை. தொழில் துறை முடக்கத்தின் காரணமாக நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவி வந்தது.
இந்த நிவையில் தற்போது கொரோனா மூன்றாவது அலைக்கு பின், தொழில் துறை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால், நாட்டின் பொருளாதாரம் விரைவில் எழுச்சி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த நம்பிக்கையை குலைக்கு விதமாக தொழில் துறை தற்போது மற்றொரு பிரச்னை ஏற்பட்டுள்ளது.
கோடை காலம் தொடங்கிவிட்டதையடுத்து வீடுகளுக்கான மின்நுகர்வு அதிரடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம் தொழிற்சாலைகளும் முழுவீச்சில் இயங்க தொடங்கி உள்ளதால் அவற்றுக்கான மின் தேவையும் உயர்ந்துள்ளது.
இந்த தேவைகளுக்கேற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவுக்கு நிலக்கரி உள்ளிட்ட மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக இந்த கோடை காலத்தில் நாடு மிகப்பெரிய அளவுக்கு மின்தட்டுப்பாட்டை சந்திக்கும் அபாயம் உள்ளது.
இந்த அபாயத்தில் இருந்து தப்பிக்கும் பொருட்டு, ஆந்திர மாநில மின் பகிர்மான கழகம் அசத்தல் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தின்படி, மாநிலத்திவ் தற்போது தடையின்றி செயல்படும் 253 தொழிற்துறை அலகுகளுக்கும், முந்தைய கடப்பா மற்றும் சித்தூரை உள்ளடக்கிய மாவட்டங்களில் செயல்படும் 1,696 தொழிற்சாலைகளுக்கும் வாராந்திர விடுமுறையுடன் இனி வெள்ளிக்கிழமைகளை ‘பவர் ஹாலிடே’ விடப்படும்.
‘அய்யயோ என்னடா லைன் கட்டி நிக்கிறீங்க’ – வைரலாகும் அமைச்சர் சந்திர பிரியங்கா வீடியோ!
முதல்கட்டமாக வரும் 22 ஆம் தேதி வரை, தொழிற்சாலைகளுக்கு வார விடுமுறையுடன் வெள்ளிக்கிழமை ‘பவர் ஹாலிடே’ அளிக்கப்படும். நுகர்வு அளவுக்கு மின்சாரம் கிடைக்கும்போது, இந்த நடைமுறை தளர்த்தப்படும் என்று ஆந்திர மாநில மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.