‘கர்நாடகாவில் ‘பிட் காயின்’ வழக்கை விசாரிக்க, அமெரிக்காவின் விசாரணை குழு இந்தியாவுக்கு வரவில்லை’ என, சி.பி.ஐ., மறுத்துள்ளது.கர்நாடகாவில் ‘பிட் காயின்’ ஊழல் குற்றச்சாட்டில், அரசியல்வாதிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பெயர் அடிபட்டது.அவர்கள் சர்வதேச ஹேக்கரிடமிருந்து, ‘பிட் காயின்’ வடிவத்தில் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்ரீகிருஷ்ணா எனும் ஸ்ரீகி, 2020 நவம்பரில் கைது செய்யப்பட்டார்; தற்போது ஜாமினில் உள்ளார். ஆனால் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை.சர்வதேச ஹேக்கர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாக கூறப்பட்டதால், அமெரிக்காவின் எப்.பி.ஐ., எனும் பெடரல் விசாரணை குழுவினர் இந்தியாவுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இது குறித்து சி.பி.ஐ., எனும் மத்திய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:’பிட் காயின்’ விவகாரத்தில் விசாரணை நடத்த அமெரிக்காவின் எப்.பி.ஐ., எந்தக் குழுவையும் இந்தியாவுக்கு அனுப்பவில்லை. இவ்வழக்கில் இந்தியாவில் விசாரணை நடத்த, சி.பி.ஐ.,யிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.இந்தியாவில் உள்ள தகுதி வாய்ந்த அதிகாரிகளால் விசாரணைக்கு அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்வி எழவில்லை.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
– நமது நிருபர் –
Advertisement