பிரான்சில் ஜனாதிபதியை தேர்வு செய்யும் முதல் சுற்று வாக்குப்பதிவு இன்று முடிவடைந்து இருக்கும் நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது, இதில் முதல் சுற்று வாக்குப்பதிவு இன்று முடிவடைந்து இருக்கும் நிலையில் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 24ம் திகதி நடைபெற உள்ளது.
முதல் சுற்று வாக்குப்பதிவானது இன்று இரவு 8 மணிக்கு முடிவடைந்து இருக்கும் நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை தேசிய ஒளிபரப்பாளர் பிரான்ஸ் டெலிவிஷன்ஸ் வெளியிட்டுள்ளது.
இதில் தற்போதைய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் 28.1 சதவிகித ஆதரவுடன் முதலிடத்திலும், வலதுசாரி கொள்கை பின்பற்றும் கட்சி வேட்பாளர் மரைன் லு பென்னுக்கு 23.3 சதவிகித ஆதரவுடன் இரண்டாம் இடத்திலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடதுசாரி கட்சி தலைவர் ஜீன்-லூக் மெலன்சோன், 20 சதவிகித ஆதரவுடன் மூன்றாம் இடத்திலும் இருப்பதாக வாக்கெடுப்புக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
மேலும் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவில் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் மரைன் லு பென்னுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் இம்மானுவேல் மக்ரோன் வெற்றிபெற்றால் 20 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகும் முதல் ஜனாதிபதி என்ற பெருமையை மக்ரோன் பெறுவார்.
ஆனால் அத்தகைய வெற்றி சுலபமாக இருக்காது என்றும் இரண்டாவது சுற்றில் லு பென் வலுவான போட்டியாளராக இருப்பார் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
பொதுவாக Ifop, OpinionWay, Elabe மற்றும் Ipsosஆகிய நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் பிரான்சில் பரவலான மக்களால் நம்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பாக நடைபெறும் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: முக்கிய தகவல்கள்