பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்த நிலையில் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கு திங்கட்கிழமையன்று நாடாளுமன்றம் கூட உள்ளது.
அந்நாட்டின் பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரான ஷெபாஸ் ஷெரீப் முன்னிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல், இம்ரான் கானின் பிடிஐ கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷியும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே, பாகிஸ்தானில் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள இம்ரான் கான், இந்தப் போராட்டம் பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய வெளிநாட்டு சதிக்கு எதிரானது என்றார்.