மதுபானம் வாங்கி வர கூறியதில் ஏற்பட்ட தகராற்றில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாட்டம், கீழநாஞ்சில்நாடு பகுதியை சேர்ந்தவர் ஜீவா. இவர் காமராஜர் பஸ் நிலையம் பின்புறம் பஜனை மடத்தெருவில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்க சென்றார். அங்கு மதுபாட்டில்களை சேகரித்துக் கொண்டிருந்த பார் ஊழியரான தமிழ்மணி என்பவரிடம் பணத்தை கொடுத்து மதுபானம் வாங்கி வர சொல்லியுள்ளார்.
ஆனால், அதற்கு அவர் மறுக்கவே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. மதுபாட்டிலை வாங்கி கொண்டு ஜீவா அங்கிருந்து சென்றுவிட்டார். இதனையடுத்து, இரவு 11.30 மணியளவில் ஜீவா தனது நண்பர்களான பிரேம்குமார், வினோத், அன்புமணி ஆகியோருடன் மீண்டும் வந்து தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த தமிழ்மணி அரிவாளால் ஜீவாவை வெட்டியுள்ளார். இதில், படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டாதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தமிழ்மணியை கைது செய்தனர். மருத்துவமனை முன் கூடிய ஜூவாவின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் மதுவிற்பனை நடைபெறுவதாகவும் அதனால், அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.