கேவாடியா : குஜராத்தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், மத்தியஸ்தத்தின் முக்கியத்துவம் குறித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவும் விளக்கிப் பேசினர்.
குஜராத்தின் கேவாடியா மாவட்டத்தில், மத்தியஸ்தம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான இரண்டு நாள் தேசிய மாநாடு நேற்று துவங்கியது. இதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, குஜராத் முதல்வர் பூபேந்திர பாய் படேல் ஆகியோர் பங்கேற்றனர். அந்த விழாவில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஒரு பிரச்னைக்கு தீர்வு காண மத்தியஸ்தம் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து பேசினார்.
நீதித்துறை அமைப்பில், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அதே வேளையில், அதை மக்கள் எளிதில் அணுக வழிவகை செய்யவும் அவர் வலியுறுத்தினார். பின் பேசிய தலைமை நீதிபதி ரமணாவும், மத்தியஸ்தத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
கேவாடியா : குஜராத்தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், மத்தியஸ்தத்தின் முக்கியத்துவம் குறித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவும் விளக்கிப்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.