மாதம் ரூ.1000 முதலீடு; இரட்டிப்பு வருமானம்; தபால் அலுவலக சூப்பர் ஸ்கீம் இதுதான்!

Post office savings scheme Kisan Vikas Patra doubled your money: இந்திய அஞ்சல் அலுவலகம் தபால் சேவையோடு, அதிக வட்டி விகிதங்களுடன், குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் சேமிப்பை அதிகரிக்க உதவும் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களின் பட்டியலையும் கொண்டுள்ளது.

நீங்கள் ஆர்வமுள்ள முதலீட்டாளராக இருந்து, குறைந்த ரிஸ்க் வழங்கும் திட்டத்தைத் தேர்வுசெய்ய விரும்பினால், உங்கள் பணத்தை முதலீடு செய்ய அஞ்சல் அலுவலகம் சிறந்த இடமாகும். தபால் அலுவலகம் வழங்கும் திட்டங்கள் சந்தை விகிதங்களை நம்பியிருக்கவில்லை மற்றும் வருமானம் வரும்போது உத்தரவாதம் உள்ளது.

அஞ்சல் அலுவலகத்தின் பிரபலமான திட்டங்களில் ஒன்று கிசான் விகாஸ் பத்ரா திட்டமாகும், இது சில ஆண்டுகளில் உங்கள் சேமிப்பை இரட்டிப்பாக்க உதவும். தபால் அலுவலகத்தின் கிசான் விகாஸ் பத்ரா சிறு சேமிப்புத் திட்டத்தை நீங்கள் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையான ரூபாய் 1000 உடன் தொடங்கலாம்.

இந்த அஞ்சல் அலுவலகத் திட்டத்தில் ஒருவர் தங்களுக்காகவோ அல்லது மைனர்களுக்காகவோ கணக்கைத் தொடங்கலாம். கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் கூட்டுக் கணக்கையும் தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 1000 ஆகும், இதற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.

ஒரு முதலீட்டாளர் 10 ஆண்டுகளுக்கும் மேலான 124 மாதங்களுக்கு KVP திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினால், அவர்களின் ஆரம்ப முதலீடு இரட்டிப்பாகும் என்று அஞ்சல் அலுவலக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் கூறுகின்றன. இந்தத் திட்டம் தற்போது முதலீடுகளுக்கு 6.9% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

இதையும் படியுங்கள்: 5 ஆண்டுகளில் இரட்டிப்பு லாபம்; எல்ஐசியின் சூப்பர் ப்ளான்கள் இதோ…

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்றிக் கொள்ளலாம். இந்த சேமிப்பு திட்டத்தில் ஒரு நாமினி வசதியும் உள்ளது, மேலும் கணக்கை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றவும் முடியும்.

கிசான் விகாஸ் பத்திரத்தின் முதிர்வு (லாக்-இன்) KVP சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு (30 மாதங்கள்) பணமாக்கப்படலாம். வருமான வரிச் சட்டத்தின் 80C இன் கீழ், முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் வரி விலக்கின் பலனைப் பெறுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கேவிபி சிறு சேமிப்புத் திட்டக் கணக்கைத் திறக்க, பின்வரும் ஆவணங்கள் தேவை

  1. ஆதார் அட்டை
  2. வீட்டுச் சான்று
  3. கேவிபி விண்ணப்பப் படிவம்
  4. வயதுச் சான்று
  5. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  6. மொபைல் எண்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.