மோகன் ஜி – செல்வராகவனுடன் நட்டியும் இணைந்தார்!

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய அதிரடி படங்களின் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன் ஜி.

அவர் அடுத்ததாக ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் புதிய பட உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

இப்படத்தில், இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது நடிகர் நட்டி இந்த படத்தில் இணைந்துள்ளார்.

இது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை நிச்சயம் ஏற்படுத்தி இருக்கிறது.

“மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். படப்பிடிப்பை இம்மாதம் இறுதியில் துவங்க இருக்கிறோம்” என இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.