மோடி எச்சரிக்கை… இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு?

குஜராத் மாநிலம் கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதா கோயில் நிறுவன தினத்தையொட்டி இன்று விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி காணொலி முலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது:

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த 85 கோடி டோஸ் தடுப்பூசிகள் இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளன. உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள இந்த சாதனை பொதுமக்களின் ஆதரவால் சாத்தியம் ஆகியுள்ளது.

கொரோனா நெருக்கடி முடிந்துவிட்டது என்று நாங்கள் கூறவில்லை. கொரோனா தொற்று இந்தியாவை விட்டு முற்றிலும் நீங்கவில்லை. வடிவங்களை மாற்றி மீண்டும் அது பரவுகிறது. எனவே கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் தங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை குறைக்க வேண்டாம்.

ரசாயன உரங்களின் பாதிப்பில் இருந்து பூமியை காக்க இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் திரும்ப வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் இரத்தசோகை பாதிப்புள்ள பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க கிராம அளவில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 ஏரிகள் அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

அமித் ஷாவுக்கு திமுக செம செக் – அமைச்சர் பதவிக்கு ஆபத்து?

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமலில் இருந்த நடவடிக்கைகள் அனைத்தும் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாத இறுதியில் அறிவித்திருந்தது. இந்த நிலையில் கொரோனா நெருக்கடி முடிந்துவிட்டது என்று நாங்கள் கூறவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா குறித்த பிரதமரின் இந்த எச்சரிக்கையால், நாட்டில் எந்த நேரமும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.