வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்-‘அணி சேரா நாடுகள் வாயிலாக ரஷ்யா உடன் ஏற்பட்ட வரலாற்றுபூர்வமான உறவிலிருந்து விலகி வர இந்தியாவை வலியுறுத்துவோம்’ என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
அமெரிக்க பார்லி.,யில் வெளியுறவு விவகாரங்கள் குழு கூட்டம் நடந்தது. இதில், அமெரிக்க வெளியுறவு துறை இணை அமைச்சர் வென்டி ஷெர்மன் கூறியதாவது:உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியா – அமெரிக்க ராணுவ உறவு வலுவாக உள்ளது. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் வளம் மற்றும் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட ‘குவாட்’ அமைப்பில் அமெரிக்கா உடன் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளும் உள்ளன.
ராணுவ தளவாடங்கள் விற்பனை, தயாரிப்பு உள்ளிட்டவற்றில் அமெரிக்கா உடனான கூட்டுறவை இந்தியா அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த கூட்டுறவு மேலும் வலுவடையும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதனால், அணி சேரா நாடுகள் வாயிலாக ரஷ்யா உடன் ஏற்பட்ட வரலாற்று பூர்வமான உறவிலிருந்து இந்தியாவை விலகி வருமாறு, அமெரிக்கா கேட்டுக் கொள்ள வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், இந்தியாவுக்கு எந்த வகையில் உதவலாம் என ஆலோசிக்க வேண்டும். உக்ரைன் விவகாரத்தில் நேரடியாக பேசுமாறு இந்தியாவை வலியுறுத்துவோம்.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement