ஆஸி.,யில் அடுத்த மாதம் தேர்தல்..
ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவில் மே 21ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.
அடுத்த மாதம் தேர்தல் நடைபெறுவதை ஆஸ்திரேலிய பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
2018 ஆம் ஆண்டு முதல் ஆஸி., பிரதமராக ஸ்காட் மோரிசன் பதவி வகித்து வருகிறார்.
ரஷ்ய நாடாளுமன்ற சேனலை முடக்கிய யூ-டியூப்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகியவை ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில், யூடியூப் நிறுவனம் ரஷ்யாவின் அரசு டி.வி. சேனல்கள் அனைத்தயைும் ஏற்கனவே முடக்கியுள்ளது.
இந்த நிலையில், ரஷிய நாடாளுமன்ற சேனலை யூடியூப் நிறுவனம் முடக்கியுள்ளது. தங்கள் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியதற்காக டி.வி. சேனல் முடக்கப்பட்டதாக யூடியூப் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போர் குற்றங்களுக்கு ஆதாரம் உள்ளது: உக்ரைன் அதிபர்
உக்ரைனில் ரஷிய படைகள் நடத்தியுள்ள போர் குற்றங்களுக்கு ஆதாரம் இருக்கிறது என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறினார்.
புச்சாவில் நடந்த படுகொலைகளைப் போலவே, கிராமடோர்ஸ்க் ரயில் நிலையம் மீதான ராக்கெட் தாக்குதலும் அமைந்துள்ளது.
நீதியின் முன் அவர்களை நிறுத்த வேண்டும். போர்க் குற்றங்களில் ரஷ்யா ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று ஜெனஸ்கி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது…அடுத்து என்ன நடக்கும்?
கொரோனா முடிவுக்கு வருமா?
புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் உருவாகி வருகின்றன. இந்த கொரோனா வைரஸ் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. சபை பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கூறுகையில், “உலகமெங்கும் ஒவ்வொரு நாளும் 15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஐரோப்பா முழுவதும் புதிய அலை பரவி வருகிறது. கொரோனா வைரஸ் இப்போதைக்கு முடிவுக்கு வருவது போல் தெரயவில்லை” என்றார்.