வரிச்சலுகை முதல் ஹிஜாப் தடை வரை…பிரான்சில் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?


பிரான்சில் முதல் சுற்று வாக்குப்பதிவு முடிவடைந்து இருக்கும் நிலையில், இந்த தேர்தலில் முன்னணியில் இருக்கும் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் மரைன் லு பென் இருவரின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து இந்த செய்திதொகுப்பு கீழே சுருக்கமாக விளக்குகிறது.

இம்மானுவேல் மக்ரோன்:

கரோனா பாதிப்பு, உக்ரைன் போர் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் போன்ற அடுக்கடுக்கான நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தலை சந்திக்கும் மக்ரோன் நாங்கள் தொடர்ந்து உங்களுக்கு சேவை செய்யவேண்டும் என தனது முதல் பிரச்சார கூட்டத்தில் கேட்டுக்கொண்டிருந்தார்.

மைய கருத்து கொள்கையை கொண்ட இம்மானுவேல் மக்ரோன், வலதுசாரி கொள்கையில் இருந்தும், இடதுசாரி கொள்கையில் இருந்தும் கலந்து தனது தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.

மக்ரோன் தேர்தல் வாக்குறுதிகளில் வலதுசாரி சிந்தனை கொண்ட அறிவிப்புகளாக, நிறுவனங்கள், முதன்மையாளர்கள், காவல்துறையினர் மற்றும் நீதிபதிகள் ஆகியோருக்கான வரிவிதிப்பு சலுகைகள் வழங்குவது, ஓய்வூதிய சலுகைகளின் கடன் சுமையை குறைக்கும் நோக்கில் 65 என்ற ஓய்வு பெரும் வயதை 62 ஆக குறைப்பதாக தெரிவித்துள்ளார்.

இடதுசாரி சிந்தனை கொண்ட அறிவிப்புகளாக, குறைந்தபட்ச ஓய்வூதிய மதிப்பை உயர்த்துவது, சுகாதார துறைகளில் கூடுதலான புதிய பணியாளர்களை நியமிப்பது, ஆண் பெண் சமத்துவத்தை உறுதிப்படுத்துவது மற்றும் பள்ளிகளில் நடைபெறும் துன்புறுத்தல்களை சமாளிப்பது தொடர்பான முன்னுரிமை திட்டங்கள் போன்றவைகளை அறிவித்துள்ளார்.


மரைன் லு பென்:

தீவிர வலதுசாரி சிந்தனை கொண்ட மரைன் லு பென் தனது வாக்குறுதிகளை மக்களின் தினசரி வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கை செலவுகளை கருத்தில் கொண்ட சமூக வாக்குறுதிகள் என தெரிவித்துள்ளார்.

மரைன் லு பென் வாக்குறுதிகள் முழுக்க முழுக்க வலதுசாரி சிந்தனை கொண்டவையாக பார்க்கப்படுகிறது.

அந்தவகையில், வீட்டு வசதி மற்றும் சமூக சேவைகளில் வெளிநாட்டு குடியவர்களை விட பிரான்ஸ் குடிமக்களுக்கே முன்னுரிமை.

பொது இடங்களில் இஸ்லாமியர்கள் தலைப்பாகை (ஹிஜாப்) அணிய தடை, புதிய குடியேற்றம் தொடர்பான வலுவான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படும், கூடுதலாக 25,000 சிறைச்சாலைகள் மற்றும் போலீசார், எரிவாயு மற்றும் மின்சாரம் மீது விதிக்கப்படும் வரிவிதிப்பி 20 சதவிகிதலில் இருந்து 5.5 சதவிகிதமாக குறைக்கப்படும் போன்றவை தேர்தல் வாக்குறுதியாக வெளியிடப்பட்டுள்ளது.

பிரான்சில் மீண்டும் ஜனாதிபதியாகும் இம்மானுவேல் மக்ரோன்? விறுவிறுப்பூட்டும் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

மேலும் வெளியுறவு கொள்கையை பொறுத்தவரை, உக்ரைனில் போர் தொடுத்த ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் இருந்து விலகி இருப்பது, மற்றும் பிரான்சின் இறையாண்மை கொள்கையில் நேட்டோ படைகளின் சிந்தனையில் இருந்து வெளியேறுவது போன்ற முக்கிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடித்தளத்திற்கு சவால் விடும் முதல் மாற்றங்கள் என சர்ச்சைக்குரிய வாக்குறுதிகளை மரைன் லு பென் வழங்கியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.