விறுவிறுப்பாக நடைபெறும் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல்: முக்கிய தகவல்கள்


பிரான்சில் 11வது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலின் முதலாம் சுற்று வாக்கெடுப்பு இன்று, ஞாயிற்றுக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மொத்தம் 12 வேட்பாளர்கள் இந்தமுறை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்றனர். பகல் 8 மணி முதல் மாலை 7 மணி வரையில் வாக்குப்பதிவு முன்னெடுக்கப்படும்.

ஆனால் மக்கள் நெருக்கடி அதிகம் கொண்ட Paris, Bordeaux, Marseille, Toulouse, Lyon, Nantes மற்றும் Nice ஆகிய பகுதிகளில் இரவு 8 மணிவரை வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படும்.

தலைநகர் பரிசில் நண்பகல் வரை 15.34% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ள. கடந்த 2017ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது நண்பகல் வரை 24.24% வாக்குகள் பதிவாகியிருந்தது.

இதனிடையே, அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தனது சொந்த ஊரான Le Touquet பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

அவரது மனைவி பிரிஜித் மேக்ரானும் தமது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளரான Eric Zemmour பாரிஸ் 8 ம் வட்டாரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமது ஆவணங்களை சமர்ப்பித்து தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

தலைநகர் பாரிசில் மொத்தமாக 899 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,355,541 பேர் வாக்களிக்கத் ஏற்புடையவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதேவேளை, பாரிசில் இரவு 8 மணி வரை வாக்குச்சாவடிகள் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 7 மணியுடன் முதல் சுற்று வாக்கெடுப்பு முடிவடையும். இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு ஏப்ரல் 24 ம் திகதி இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.