நாட்டின் விவசாயிகள் வலிமையானவர்களாக மாறினால், புதிய இந்தியா மேலும் வளமானதாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து டிவிட்டரில் பதிவிட்ட அவர், பிரதமரின் கிசான் நிதி மற்றும் விவசாயம் தொடர்பான பல திட்டங்களினால் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலம் கிடைத்து வருவதில் மிகழ்ச்சி அடைவதாக கூறினார்.
மேலும், பதினொரு கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக ஒரு லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதமரின் கிசான் சம்மன் நிதியின் கீழ் ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சிறு விவசாயிகள் பலனடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.