வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: எரிபொருள் விலை மற்றும் பிற விலைவாசிகளும் உயர்ந்திருப்பதால் மக்கள் தங்கள் மாதாந்திர வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், வாகனங்கள், ஏ.சி., பிரிட்ஜ் போன்றவற்றை வாங்குவதை குறைப்பார்கள் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இது பற்றி பல்வேறு நிறுவனங்களின் தலைமை பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது: வீட்டுச் செலவில் எரிபொருள் மற்றும் போக்குவரத்துக்கான செலவு 2023 நிதியாண்டில் 2.5 சதவீதம் அதிகரிக்கக் கூடும். இதனை சரிகட்ட பிற பொருட்களுக்கான செலவினை மக்கள் சரிசெய்வார்கள். எரிபொருள் விலையேற்றத்தால் பொருட்களுக்கான உற்பத்திச் செலவு மற்றும் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. இது தேவையை பாதிக்கும். தொற்றுநோய் குறைவதால் சேவைகளுக்கான தேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவும் பொருட்களின் தேவையை பாதிக்கும். சில்லறை பணவீக்கம் 5.1 முதல் 6.2% ஆக உள்ளது.
இந்த ஒருங்கிணைந்த காரணிகள் குடும்பங்கள் மீது தாக்கம் செலுத்தும். இதனால் குடும்பங்களின் நுகர்வு 8 சதவீதத்திற்கும் குறைவாகவே வளரக்கூடும். 2022ல் கூட ஜி.டி.பி.,யில் குடும்பங்களின் நுகர்வு 56.6% ஆக இருந்தது. கோவிட்டிற்கு முந்தைய நிலையை காட்டிலும் இது சற்றே குறைவானது. எரிபொருள் மற்றும் சமையல் எண்ணெயின் அதிக விலை ஏழை மற்றும் நடுத்தர பிரிவினரிடையே செலவை சுருக்கக்கூடும். ரிசர்வ் வங்கி 2023 நிதியாண்டுக்கான நுகர்வோர் பணவீக்க கணிப்பை 4.5% அளவிலிருந்து 5.7% ஆக உயர்த்தியுள்ளது. அதே சமயம் வளர்ச்சிக் கணிப்பை 7.8 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதமாக குறைத்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
Advertisement