இந்தியாவின் மிகப்பெரிய ஆய்வு காப்பீட்டு சேவை நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் காரணத்தால் மக்கள் மத்தியில் அதிகப்படியான நம்பிக்கையைப் பெற்று இயங்கி இத்துறையில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்து வருகிறது.
லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அனைத்துத் தரப்பு மக்களையும், அனைத்து வயதுடையவர்களையும் கவர வேண்டும் என்பதற்காக எல்ஐசி நிறுவனம் அதிகப்படியான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
சீரிஸ் 1 :பங்கு சந்தை என்றால் என்ன.. இது எப்படி வேலை செய்கிறது.. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
சிறு முதலீட்டாளர்கள்
இதில் சிறு முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அறிமுகம் செய்துள்ள Aadhaar Shila திட்டம், இத்திட்டம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்காகவே அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சிறப்புத் திட்டம்..
எல்ஐசி – ஆதார் ஷிலா திட்டம்
இந்தியாவில் நடத்தர மக்கள் பயம் இல்லாமல் பணத்தைச் சேமிக்கத் தேர்வு செய்ய இருக்கும் மிக முக்கியமான இடம் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா. நாம் இன்று தெரிந்து கொள்ளப் போகும் ஆதார் ஷிலா திட்டம் முதலீட்டில் ஆபத்து இல்லை அதேபோல் நிர்ணயம் செய்யப்பட்ட தொகை உரிய காலகட்டத்திற்குப் பின்பு உறுதியாகக் கிடைக்கும்.
நிதியியல் பாதுகாப்பு
ஆதார் ஷிலா திட்டம் என்பது லைப் அசூரன்ஸ் திட்டம், அதாவது பாலிசிதாரர் திட்டத்தின் முதிர்வு காலம் முடியும் முன்னரே இறந்துவிட்டால் இத்திட்டம் மூலம் பாலிசிதாரர் குடும்பத்திற்கு நிதியியல் பாதுகாப்பு அளிக்கப்படும். மேலும் இத்திட்டம் சிறு முதலீட்டாளர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டு உள்ளதால் பல கோடி குடும்பங்களுக்குப் பெரிய அளவில் பயன்படும்.
75,000 ரூபாய், 10 வருடம்
ஆதார் ஷிலா திட்டத்தில் குறைந்தபட்சமாக 75,000 ரூபாய் உறுதி பணத்திற்கு முதலீடு செய்யலாம் என்பது தான் மிகவும் முக்கியமான விஷயமாக உள்ளது. இதேபோல் இத்திட்டத்தின் முதிர்வு காலம் 10 வருடம் முதல் 20 வருடமாக உள்ளது. இதேபோல் ப்ரீமியம் தொகை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, வருடாந்திர அடிப்படையில் செலுத்தும் வாய்ப்பு உள்ளது.
வெறும் 29 ரூபாய்
உதாரணமாகத் தினமும் 29 ரூபாய் தொகையை நீங்கள் சேமித்து வருடத்திற்கு 10959 ரூபாய் தொகையை ஆதார் ஷிலா திட்டத்தில் முதலீடு செய்தால், 20 வருட முதலீட்டுக்குப் பின்பு உங்கள் முதலீட்டுத் தொகை அளவு 2,14,696 ரூபாயாக இருக்கும், இதேபோல் முதிர்வு பெறும் தொகை 3,97,000 ரூபாயாக அதிகரிக்கும். கிட்டத்தட்ட இரட்டிப்பு லாபத்தை அளிக்க உள்ளது.
பெண்கள்
ஆதார் ஷிலா திட்டம் 8 முதல் 55 வயதுடைய அனைத்து பெண்களுக்கும் முதலீடு செய்ய எல்ஐசி அனுமதி அளிக்கிறது, இத முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ய மருத்துவப் பரிசோதனை செய்த பின்பே அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே பெண் குழந்தைகளின் கல்வி, பிஸ்னஸ் கனவு, பாரின் டிரிப், திருமணம், போன்ற அனைத்து முக்கியமான விஷயங்களுக்கும் இந்த முதலீட்டுத் திட்டம் பெரிய அளவில் பயன்படும்.
LIC Aadhaar Shila Plan: Earn 4 lakhs with just 29 rupee savings a day
LIC Aadhaar Shila Plan: Earn 4 lakhs with just 29 rupee savings a day வெறும் 29 ரூபாய் முதலீட்டில் 4 லட்சம் வருமானம்.. எல்ஐசியின் சூப்பர் திட்டம்..!