அனுதீப் இயக்கத்தில்
சிவகார்த்திகேயன்
நடித்து வரும் படத்தை தற்போதைக்கு எஸ்.கே. 20 என்று அழைக்கிறார்கள். அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பவர் உக்ரைனை சேர்ந்த
மரியா
ரியாபோஷப்கா.
ஒரு தேவதை வந்துவிட்டதாக மரியாவை அறிமுகம் செய்து வைத்தது படக்குழு. உக்ரைனில் நடந்து வரும் போரால் வேதனையில் இருக்கிறார் மரியா.
இந்நிலையில் எஸ்.கே. 20 படத்தில் நடிப்பது குறித்து சமூக வலைதளத்தில் உருக்கமான போஸ்ட் போட்டிருக்கிறார் மரியா. அந்த போஸ்ட்டில் மரியா கூறியிருப்பதாவது,
உக்ரைனில் நடந்து வரும் மோசமான சம்பவங்களுக்கு இடையே நான் நல்ல செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அனுதீப், சிவகார்த்திகேயனின் எஸ்.கே. 20 படத்தில் நடிக்கிறேன்.
இது போன்ற சுவாரஸ்யமானவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்களின் அக்கறைக்கும், ஆதரவுக்கும் நன்றி, நீங்கள் தான் சிறந்த படக்குழு.
என் நாட்டை நான் ரொம்பவும் மிஸ் பண்ணுகிறேன். இந்த நேரத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். அதை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள், மரியாவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
எஸ்.கே. 20 படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் துவங்கியது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. எஸ்.கே. 20 படத்தில் சத்யராஜ், நவீன் பாலிஷெட்டி, பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் படத்திற்கு தமன் இசையமைப்பது இதுவே முதல் முறையாகும்.
Vijay:விஜய் ‘ஒரு மாதிரி’னு செல்வராகவன் சொன்னது சரியா தான் இருக்கு