புதுடெல்லி: தீவிரவாத செயலில் ஈடுபடும் அமைப்புகளுக்கு தடை விதிக்க சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் (யுஏபிஏ) 1967-ல் கொண்டுவரப்பட்டது. இது கடந்த 2019-ல்திருத்தப்பட்டது. தீவிரவாத செயலில் ஈடுபடும் தனி நபரை தீவிரவாதி என அறிவிக்க இது வகை செய்கிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கடந்த 8-ம் தேதியிட்ட அரசிதழில், “லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத், இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை திட்டமிட்டு நிகழ்த்தி உள்ளார். மேலும் ஆள் சேர்த்தல் மற்றும் நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். எனவே, யுஏபிஏ சட்டத்தின் கீழ் ஹபீஸ் தல்ஹா சயீத் தீவிரவாதி என அறிவிக்கப்படுகிறார்” என கூறப்பட்டுள்ளது.