92 year old completes 5 KM marathon viral video: 92 வயதில் 5 கிமீ மாரத்தான் போட்டியில் கலந்துக் கொண்டு கடைசி வரை ஓடிய முதியவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இது தொடர்பாக பாஜக எம்பி வெளியிட்டு இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
8-வது பெங்களூரு மாரத்தான் போட்டி ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டி மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. அதாவது 42.2 கிமீ மராத்தான், 21.09 கிமீ அரை மாரத்தான் மற்றும் 5 கிமீ மாரத்தான்.
இதில் 5 கிமீ தூரம் கொண்ட மாரத்தான் போட்டியில் 92 வயது முதியவரான ஸ்ரீ தத்தாத்ரேயா கலந்துக் கொண்டார். அவர் போட்டியில் வெறுமனே கலந்துக் கொள்வதுதோடு நிற்காமல், முழு தூரத்தையும் கடந்தார். அதாவது 5 கிமீ தூரத்தை அவர் ஓடிக் கடந்தார். இதில் அவர் தனது ஓட்டத்தின்போது பல போட்டியாளர்களை தாண்டி ஓடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து 92 வயது முதியவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் 92 வயது முதியவரான ஸ்ரீ தத்தாத்ரேயாவை பாராட்டி, “ஸ்ரீ தத்தாத்ரேயா ஜி, ஒவ்வொரு பெங்களூருவாசியின் வலிமையையும் மன உறுதியையும் உண்மையிலேயே அடையாளப்படுத்துகிறார்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: லஞ்சம் அல்ல ஊதியம் கடந்த வருமானம்னு மரியாதையா பேசுங்க… இன்றைய அரசியல் மீம்ஸ்
மேலும், இவர் பெங்களூரு மாரத்தானில் கலந்துக் கொண்டார். 5 கிமீ தூரத்தை ஓடிக் கடந்தார். வழியில் பலரையும் விஞ்சினார். ஃபிட் (உடல் கட்டுக்கோப்பு) பெங்களூருவுக்கான உண்மையான தூதர்! என்றும் பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முதியவரின் அசாத்திய திறமையைக் கண்டு நெட்டிசன்கள் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.