Beast:பொம்பள புள்ள இடுப்ப புடிக்கப் பாயும் விஜய்: என்னய்யா நடக்குது?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்
விஜய்
,
பூஜா ஹெக்டே
உள்ளிட்டோர் நடித்திருக்கும்
பீஸ்ட்
படம் ஏப்ரல் 13ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

இந்நிலையில் படம் குறித்து ரசிகர்களிடையே ஆவலை தூண்டிக் கொண்டே இருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். அதன் ஒரு பகுதியாக பீஸ்ட் படத்தின் புதிய ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், பயமாக இருந்தால் என் கையை வேணும்னா பிடுச்சுக்கோங்க சார் என்று பூஜா ஹெக்டே சொல்ல, நான் வேணும்னா உங்க இடுப்பை புடுச்சுக்கட்டுமா என்று விஜய் வில்லங்கமாக கேட்கிறார்.

மேலும், உங்கள காப்பாத்தணும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்னவென்று மீண்டும் வில்லங்கமாகவே பேசியிருக்கிறார் விஜய்.

என் பட ட்ரெய்லர், ப்ரொமோவில் ஒன்று இருக்கும், படத்தில் வேறு ஒன்று இருக்கும் என்று நெல்சனே கூறியிருக்கிறார். அதனால் விஜய் இப்படி ஏடாகூடமாக பேசுவதை வைத்து யாரும் அவசரப்பட வேண்டாம். படத்தை பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது.

முன்னதாக வெளியான ட்ரெய்லரை பார்த்தவர்களோ, இது கூர்கா படம் மற்றும் மணிஹெய்ஸ்ட் தொடரின் காப்பி என்றார்கள். ஆனால் பீஸ்ட் படம் எதன் காப்பியும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார் நெல்சன் திலீப்குமார்.

ரஜினி கட்சி துவங்கி இன்றுடன் 25 வருஷமாச்சு: கொண்டாடும் ரசிகர்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.