வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் கடந்த வாரம் ஐபிஓ வெளியிட்ட நிலையில், இந்நிறுவன பங்குகள், ஏப்ரல் 11 திங்கட்கிழமை இன்று பங்குச்சந்தைகளில் வலுவான நிலையில் பட்டியலிடப்பட்டு உள்ளது.
ஐபிஓ-வில் சிறப்பான முதலீட்டை பெற்ற வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் இன்றும் மும்பை பங்குச்சந்தையில் சுமார் 14.60 சதவீதம் பிரீமியம் விலையில் பட்டியலிடப்பட்டு உள்ளது.
3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இரு பங்குகளை பரிந்துரை செய்யும் நிபுணர்கள்.. ஏன்!
ஐபிஓ விலை 137 ரூபாயாக இருந்த நிலையில் எதிராகப் பிஎஸ்இ-யில் 157 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டு வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் 8.7 சதவீதம் குறைந்து ரூ.125-ல் தொடங்கியது.
வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ்
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் டிஜிட்டல் கல்வி சேவைகளை வழங்கும் வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் மார்ச் 29-31 ஐபிஓ வெளியிட்டது. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்த நிலையில் வெராண்டா சிறப்பான முதலீட்டைப் பெற்றது.
சில்லறை முதலீட்டாளர்கள்
வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம் அனைத்துப் பிரிவு முதலீட்டாளர்களிடமும் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், 3.53 மடங்கு அதிக முதலீட்டை பெற்றது. குறிப்பாகச் சில்லறை முதலீட்டாளர்கள் அதிகப்படியான ஆதரவைத் தெரிவித்தனர், ரீடைல் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை விடவும் 10.76 மடங்கு அதிக பங்குகள் மீது முதலீடு செய்தனர்.
பிளாட் ஆக முடியலாம்
பங்குச் சந்தை ஆய்வாளர்கள் கூறுகையில் வெராண்டா லேர்னிங் பங்கு விலை இன்று ‘பிளாட்’ஆக முடியலாம், இந்நிறுவனம் குறைந்த அளவிலான லாபத்தில் இயங்கி வருவதாகவும், அதிக மதிப்பீட்டில் ஐபிஓ வெளியிட்டுப் பங்குகள் வர்த்தகத்திற்கு வந்துள்ளதாகச் சிலர் கூறியுள்ளனர்.
ரூ.200 கோடி
இந்த ஐபிஓ மூலம் வெராண்டா லேர்னிங் நிறுவனம் வெற்றிகரமாக ரூ.200 கோடி திரட்டியது, இந்தத் தொகையைக் கடன்களைத் திருப்பிச் செலுத்துதல், எடுரேகாவின் கையகப்படுத்தும் திட்டத்தைப் பரிசீலனை செய்யவும், வளர்ச்சி திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் கல்வி சேவை
ஆன்லைன் கல்வி சேவை நிறுவனங்கள் தற்போது புதிய முதலீடுகளைத் திரட்ட முடியாமல் தவித்து வரும் நிலையில் வெராண்டா லேர்னிங் ஐபிஓ வெளியிட்டு முதலீட்டை திரட்டியுள்ளது. இதுவே ஜாக்பாட் தான்.
நீண்ட கால முதலீடு
இதேபோல் இத்துறை சார்ந்த நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மிகவும் குறைவு என்பதால் வெராண்டா லேர்னிங் நிறுவனத்தின் நீண்ட கால முதலீட்டுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. மேலும் தொடர்ந்து லாபத்தை அறிவித்தால் கட்டாயம் சிறப்பான லாபத்தை அடைய முடியும்.
19.01 சதவீதம் உயர்வு
மதிய வர்த்தகத்தில் வெராண்டா லேர்னிங் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் ஐபிஓ விலையைக் காட்டிலும் 19.01 சதவீதம் அதிகமாக வளர்ச்சி அடைந்து 163.05 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஐபிஓ முதலீட்டாளர்கள் உடனடியாக விற்பனை செய்யாமல் காத்திருந்து விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் லாபத்தைப் பெற முடியும்.
Veranda IPO shares listed at 14.6 percent Premium today; Should You Buy, Hold or Sell?
Veranda IPO shares listed at 14.6 percent Premium today; Should You Buy, Hold or Sell? அசத்தும் வெரான்டா ஐபிஓ.. 14.6% ப்ரிமியம் விலையில் பட்டியல்.. விற்க வேண்டுமா..?