அசைவ உணவு உண்டதற்காக டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராம நவமியான நேற்று அசைவ உணவு வழங்கக்கூது என பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி போராட்டம் நடத்தியது. இதற்கு இடசாரி மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காவேரி தங்கும் விடுதியில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
அசைவ உணவு உண்டதற்காக டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தாக்குதல் தொடுப்பதா?
JNU Authorities Should Take Stern and Legal Action against ABVP Members who Attacked Hostel Students for Eating Non-Vegetarian food!https://t.co/x2ub6h46Cj#JNUAttack pic.twitter.com/ZToCf0gOrh
— சீமான் (@SeemanOfficial) April 11, 2022
இதையடுத்து இடதுசாரி மாணவர்களும் தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்பினரும் கற்கள், டியூப் லைட் கொண்டு தாக்கிக் கொண்டதில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.அதிலும் சில மாணவிகள் மீது இரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல் நடத்தப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரின் அறிக்கையில், டெல்லி நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு அருந்தியதற்காக மாணவர்கள் மீது அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் கொடும் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியளிக்கிறது.
உணவு, உடை, வழிபாடும் போன்றவைகள் எல்லாம் தனிமனித விருப்பங்களை சார்ந்தவை. அதற்கு இடையூறு செய்வது ஏற்புடையதல்ல.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது கல்லூரி நிர்வாக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டு கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் இல்லை! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு