கீவ்: ரஷ்ய படைகள் இன்னும் அதிகமான ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்கலாம் என்பதால், அடுத்த சில நாட்கள் முக்கியமானவை என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது 47 நாட்களாக தொடர்ந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலை உக்ரைனும் எதிர்த்து போரிட்டு வருகிறது. தலைநகர் கீவ் நகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் முயன்றும் அதனை உக்ரைன் படைகள் முறியடித்து வருகின்றன. மேலும், ரஷ்ய கூட்டமைப்பின் எந்தவொரு தயாரிப்பையும், இனி இறக்குமதி செய்யப்போவதில்லை எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால், இருநாடுகளுக்கும் இடையிலான போர் இன்னும் தீவிரமாகும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், உக்ரைன் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அந்த நாட்டின் அதிபர் செலன்ஸ்கி பேசியதாவது: ரஷ்ய படைகள் கிழக்கு பகுதியில் விரிவான போரை நடத்த வாய்ப்புள்ளது. உக்ரைனுக்கு எதிராக இன்னும் அதிகமான ஏவுகணைகளை பயன்படுத்தலாம். எனவே, அடுத்த சில நாட்கள் முக்கியமானவை. போர்க்குற்றங்களை செய்துள்ள ரஷ்யா அதை ஒப்புக்கொள்ள தயங்குகிறது; அந்நாடு அரக்கத்தனமாக மாறிவிட்டது. ஆனால் தவறுகளை ரஷ்யா ஒப்புக்கொள்ளும் காலம் நிச்சயம் வரும். ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு மேலும் உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement