காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் கோவில் எதிரே அமைந்துள்ள, அனுஷ்டான குளத்தை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காஞ்சிபுரம், செவிலிமேடு பகுதியில் ராமானுஜருக்கு தனி கோவில் உள்ளது. ராமானுஜர், காஞ்சிபுரத்தில் தங்கி, வரதராஜப் பெருமாளுக்கு சேவை செய்த காலத்தில், இங்குள்ள அனுஷ்டான குளத்தில் குளித்து, பெருமாளுக்கு சாலை கிணற்று தண்ணீர் எடுத்து சென்றதாக ஐதீகம்.
முகம் சுளிப்புஆண்டுதோறும் தை மாதம் நடக்கும் அனுஷ்டான உற்சவத்தின்போது, செவிலிமேடு ராமானுஜர் கோவிலுக்கு, வரதராஜ பெருமாள் எழுந்தருள்வார். அப்போது, ஆச்சாரியார்கள் அந்த குளத்தில் நீராடி, சுவாமி தரிசனம் செய்வர். தற்போது குளம் மாசடைந்திருப்பதால், யாரும் பயன்படுத்துவதில்லை.இது குறித்து ராமானுஜர் பக்தர்கள் கூறியதாவது:அனுஷ்டான குளத்தில், ராமானுஜர் நீராடியதால் அதன் புனிதத்தை பாதுகாக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு முன், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் குளம் சீரமைக்கப்பட்டது. பின், யாரும் கண்டு கொள்ளவில்லை.குளத்தை சுற்றிலும் முட்புதர்கள் மண்டியுள்ளன. ராமானுஜர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், முகம் சுளிக்கும் நிலையில், குளத்தில் அசுத்தம் செய்யப்படுகிறது.கழிப்பறை வசதிகுளத்தின் கரையை பலப்படுத்தி, சுற்றிலும் தடுப்பு அமைக்க வேண்டும். குளத்தின் உள்ளே யாரும் செல்லாதபடி பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.அதேபோல், கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இயற்கை உபாதை கழிக்க, கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்.வரும் மாதம் திருவாதிரை அன்று, பக்தர்கள், அதிகளவில் கோவிலுக்கு வருவர். பெண்கள் இயற்கை உபாதை கழிக்க, கழிப்பறை வசதியை கோவில் நிர்வாகம் அல்லது மாநகராட்சி சார்பில் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement