விழுப்புரம் : தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் வெங்கடாஜலபதி பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.கோலியனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், நடந்த முகாமில், தபால் அலுவலர் விநாயகமூர்த்தி, சிறுசேமிப்பின் பயன்கள், தபால் அலுவலக சேவைகள் குறித்தும், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து டோல்கேட் அலுவலர் சொர்ணமணியும் விளக்கினர்.
தொடர்ந்து, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை குழுவினர் மூலம் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கும் இலவசமாக கண் பரிசோதனை முகாம் நடந்தது.தீயணைப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையிலான வீரர்கள், தீத்தடுப்பு, மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த ஒத்திகை செய்து காட்டினர்.கோலியனுார் மதுரை வீரன் கோவில் வளாகம், பள்ளி வளாகம் துாய்மை பணி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, பழுதான குடிநீர் குழாய் மாற்றுதல் பணி நடந்தது.மாணவர்களுக்கு திருக்குறள் மனப்பாடம், கவிதை, கட்டுரைப் போட்டி நடத்தி, பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரி தாளாளர் மகாதேவன், முதல்வர் மணிகண்டன், துணை தாளாளர் குபேரன், செயலாளர் பிரபு, பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், கண்மணி கன்னியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். திட்ட அலுவலர் சுந்தரேசன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். விரிவுரையாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
Advertisement