நோயாளிக்கு இதயச் செயலிழப்பு எப்போது ஏற்படும் என்று கண்டறியும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.
இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கூறியதாவது:
நோயாளிகளின் இதயத்தின் புகைப்படங்களை கொண்டு இந்த தொழில்நுட்பத்துக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன்மூலம், இந்த செயற்கை தொழில்நுட்பம் ஒரு நோயாளிக்கு எப்போதும் இதயச் செயலிழப்பு ஏற்படும் என்று கணித்து கூறிவிடும்.
அதன்மூலம், மருத்துவர்கள் முன்கூட்டியே உரிய மருத்துவம் அளித்து சம்பந்தப்பட்ட நோயாளியின் உயிரை காப்பாற்றுவதற்கு முயற்சிகளை எடுக்க முடியும்.
இதுதொடர்பாக ஆராய்ச்சியாளர் ஒரு கட்டுரையை நேச்சர் கார்டியோவஸ்குலர் ரிசர்ச் என்ற இதழில் வெளியிட்டுள்ளனர்.
திடீரென இதயத் துடிப்பு சமமற்று துடிப்பதால் ஏற்படும் திடீர் மரணம் உலகளவில் 20 சதவீதம் நிகழ்கிறது. இது ஏன் நடக்கிறது அல்லது யார் அதிக ஆபத்தில் உள்ளனர் என்பதை மருத்துவர்களால் அந்த அளவுக்கு கணித்துக் கூறிவிட முடியாது என்ற அந்தக் கட்டுரையை எழுதியவர்களில் ஒருவரான நடாலியா டிரயானோவா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
திடீரென்று இதய செயலிழப்பு ஏற்படக்கூடிய ஆபத்து இல்லாதவர்கள் டிஃபிபிரிலேட்டர் சிகிச்சையைப் பெறுகிறார்கள். அது அவர்களுக்கு தேவையே இல்லை.
அதேநேரம், இதயச் செயலிழப்பு வர வாய்ப்புள்ள நோயாளிகள் தங்களுக்குத் தேவையான சிகிச்சையைப் பெறுவதில்லை. இதனால் அவர்களின் உயிர் பறிபோகும்.
எங்களின் அல்காரிதம் இதய செயலிழப்பு யாருக்கும் ஏற்படும்? எப்போது ஏற்படும்? என்பதை கணித்து கூறிவிடும். மருத்துவர்கள் தேவையான சிகிச்சை உதவிகளை செய்யலாம் என்றார் நடாலியா.
மேலும், இந்த தொழில்நுட்பத்தை வைத்து, 10 ஆண்டுகளில் திடீர் இருத செயலிழப்பு எப்போது ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கும் என்பதை கணிக்கக்கூடும்.
ஆழமான கற்றல் தொழில்நுட்பமானது இதய நோயினால் ஏற்படும் இதயத் தழும்புகளைக் குறிக்கும் வகையில் சர்வைவல் ஸ்டடி ஆஃப் கார்டியாக் அரித்மியா ரிஸ்க் (SSCAR) எனப் பெயரிடப்பட்டது.
ஆராய்ச்சியாளர்கள் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான உண்மையான நோயாளிகளிடமிருந்து (இதய வடுவுடன்) மாறுபட்ட-மேம்படுத்தப்பட்ட இதயப் புகைப்படங்களைப் பயன்படுத்தி, அல்காரிதத்துக்கு பயிற்சி அளித்தனர்.
Whatsapp: இனி கேலரியில் போட்டோ, வீடியோ கவலை இல்ல… வருகிறது புதிய அப்டேட்
நோயாளியின் வயது, எடை, இனம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் போன்ற 22 காரணிகளை உள்ளடக்கிய 10 வருட நிலையான தரவுகளிலிருந்து கற்றுக்கொள்ள இரண்டாவது நியூரல் நெட்வொர்க்கையும் ஆராய்ச்சியாளர்கள் பயிற்றுவித்தனர்.
அல்காரிதம்களின் கணிப்புகள் மருத்துவர்களைக் காட்டிலும் ஒவ்வொரு அளவிலும் மிகவும் துல்லியமானவை என்றும் அமெரிக்கா முழுவதிலும் உள்ள 60 சுகாதார மையங்களில் இருந்து ஒரு தனி மற்றும் சுயாதீனமான நோயாளி குழுவுடன் சோதனைகளில் அவை சரிபார்க்கப்பட்டன என்றும் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.
பிற மருத்துவ துறைகளுக்கும் இந்த கண்டுபிடிப்பு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil