புதுடெல்லி: பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் இன்று காணொலி மூலம் இருதரப்புஉறவுகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் ரஷ்யாவிடம் இருந்துபெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டாம்என இந்தியாவுக்கு மேற்கத்தியநாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்துகின்றனர்.
இருதரப்பு கூட்டுறவுகளை வலுப்படுத்துவது, தெற்கு ஆசியா,இந்தோ-பசிபிக் பகுதியில் சமீபத்தில் நடந்த விஷயங்கள், பரஸ்பரநலன் சார்ந்த உலகளாவிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கவுள்ளனர்.
இதன் மூலம் இரு நாடுகள் இடையேயான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் தொடரும் மற்றும் உலகளாவிய கூட்டுறவு மேலும்வலுப்படும். இந்த ஆலோசனையை தொடர்ந்து, இந்தியா-அமெரிக்க இடையே, ‘டூ பிளஸ் டூ’ பேச்சுவார்த்தை நடைபெறும். இதற்கு இந்திய தரப்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும்அமெரிக்க தரப்பில் அந்நாட்டுபாதுகாப்புத்துறை அமைச்சர்லாய்ட் ஆஸ்டின், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் ஆகியோர் தலைமை வகிக்க உள்ளனர்.
– பிடிஐ