வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் ஊரடங்கை எதிர்த்து சீன குடிமக்கள் கூச்சலிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சீனாவின் ஷாங்காய் நகரில் ஒமைக்ரான் எக்ஸ்இ தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒமைக்ரான் எக்ஸ்இ பரவலை கட்டுப்படுத்த அப்பகுதியில் சுகாதாரத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு உள்ளது. முக்கிய வர்த்தக நகரமான ஷாங்காயில் கட்டாய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று மட்டும் 25 ஆயிரம் புதிய நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் ஷாங்காயில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு எதிர்ப்பு தெரிவித்து அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து குடிமக்கள் கூச்சலிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஷாங்காய் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் கருதி வெளியே வந்து பணி செய்ய விரும்புகின்றனர். ஆனால் தற்போது வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் அப்பகுதியில் குடிமக்கள் சாலையில் நடமாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement