புதுடில்லி-மாநிலங்களின் எரிசக்தி மற்றும் பருவநிலை குறியீட்டுக்கான நிடி ஆயோக் மதிப்பீட்டில் குஜராத் முதலிடம் பெற்றுள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி திறன் மற்றும் பருவநிலை குறியீட்டு பட்டியலை, நிடி ஆயோக் வெளியிட்டு வருகிறது. இதன் முதல்கட்ட குறியீட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சுத்தமான எரிசக்தி உற்பத்தி, சுற்றுச்சூழலின் நிலைத்தன்மை, புதிய முயற்சிகள், எளிதாக கிடைப்பதற்கான வழிமுறைகள் உட்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு வெளியிடப்படுகிறது.
இதில், குஜராத் மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது. கேரளா, பஞ்சாப் மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்கள் கடைசி இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளன.இந்தப் பட்டியலில், சிறிய மாநிலங்களான கோவா, திரிபுரா மற்றும் மணிப்பூரும் இடம் பிடித்துள்ளன.
புதுடில்லி-மாநிலங்களின் எரிசக்தி மற்றும் பருவநிலை குறியீட்டுக்கான நிடி ஆயோக் மதிப்பீட்டில் குஜராத் முதலிடம் பெற்றுள்ளது.nsimg3005301nsimg மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.