எரிபொருள் சிக்கனம், கார்பன் நச்சு தவிர்ப்பு உள்ளிட்ட கருத்துகளை முன்வைத்து ஐதராபாத்தை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர், பெடல் காரை உருவாக்கி உள்ளார்.
ஒரே நேரத்தில் 7 பேர் வரை பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பெடல் காரில், 5 பேர் காரை இயக்கத் தேவையான பெடல் போடும் போது இருவர் சாவகசமாக அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காற்று மாசு, எரிபொருள் செலவீனம், கார்பன் நச்சுப்புகை வெளியேற்றம் உள்ளிட்டவகை தவிர்க்க காரை உருவாக்கியதாக தெரிவித்த பிரனாய் உபாத்யாய் பிரத்யேகமாக பேட்டரி பொருத்தி சோலார் சார்ஜிங் முறை வசதியும் காரில் செய்துள்ளதாக கூறினார்.
மிக குறுகிய தேவைகளுக்கான கார் பயன்பாட்டை தவிர்க்கவும், ஆட்டிஸம் பாதித்த தன் மகனை போல் வேறெந்தக் குழந்தையும் ரசாயன தாக்குதலுக்கு ஆளாகக் கூடாது என பிரனாய் தெரிவித்தார்.