ஐபிஎல் : லக்னோ அணிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

மும்பை ,
15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 20 -வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன 
இதில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி  ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது .

தொடக்கத்தில் பட்லர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் படிக்கல்  சாம்சன் ,ராசி வான்டெர் டுசன் என , சீரான இடைவெளியில் ஆட்டமிழந்ததால்  அந்த அணி 70 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது .பின்னர் வந்த ஹெட்மயர் ,அஸ்வின் இருவரும் நிலைத்து ஆடி ரன்களை சேர்த்தனர் .
 ஹெட்மயர் கடைசி நேரத்தில் அதிரடியாக   விளையாடி ரன்களை சேர்த்தார் சிறப்பாக விளையாடிய அவர் அரை சதம் அடித்தார்   .இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது 
தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி விளையாடுகிறது 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.