தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே அனைவர்க்கும் பிடித்த ஒருவர் தான் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது இசையைப்பற்றியும் அவரது ஆற்றலைப்பற்றியும் நாம் சொல்லி ரசிகர்களுக்கு தெரியவேண்டியதில்லை. இருப்பினும் ரசிகர்களுக்கு அதன் காரணமாக மட்டும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை பிடித்துபோகவில்லை.
எந்த சூழலிலும் சிரிப்பை கைவிடாது, எந்த உயரத்திற்கு சென்றாலும் துளியும் தலைக்கனம் இன்றி இயல்பாக நடந்துகொள்வது என இவரின் பண்புக்காகவும் இவருக்கு கோடானு கோடி ரசிகர்கள் இருக்கின்றனர்.
தளபதி 66 படம் இப்படித்தான் இருக்கும்…விஜய் கொடுத்த அப்டேட்..!
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமுகப்பக்கங்களில் நடனமாடும் தமிழன்னையின் ஓவியம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பாரதிதாசனின் வரிகளான தமிழணங்கு இன்பத்தமிழ் எங்கள் உரிமைசெம் பயிருக்கு வேர் என்ற வரிகளும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் சென்னையில் சிஐஐ சார்பில் நடைபெற்ற தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு கருத்தரங்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு ரஹ்மானை கவுரவித்தார்.
இந்நிகழ்ச்சி முடிந்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியில் வந்தபோது பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்தனர். அப்போது இந்தி தான் இணைப்பு மொழி என உள்துறை அமைச்சர்
அமித் ஷா
கூறியதைப்பற்றி ஏ.ஆர்.ரஹ்மானிடம் கருத்து கேட்டனர்.
அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதும் போல கூலாக தமிழ் தான் இணைப்பு மொழி என கூறிவிட்டு அமைதியாக தன் காரில் ஏறி சென்றுவிட்டார். தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த அந்த பதில் இணையத்தில் வைரலாக பரவிவருகின்றது. மேலும் அனைத்து தமிழ் மக்களின் பாராட்டையும் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.