உலகில் வாகனங்களிலிருந்து வரும் கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் நோக்கத்தில், தெலங்கானாவை சேர்ந்த ஒரு தொழில்நுட்ப வல்லுநர் பெடல் மூலம் இயங்கும் கார் ஒன்றை தயாரித்திருக்கிறார். இந்தக் கார் மூலம் எரிபொருள் உபயோகப்படாத சூழ்நிலையை மக்களுக்கு உருவாக்க முடியுமென்றும், `இன்ட்ரா-சிட்டி’க்குள் மட்டுமே இதை சௌகரியமாக பயன்படுத்த முடியுமென்றும் இதை உருவாக்கியவர் தெரிவித்துள்ளார்.
ப்ரணவ் உபாத்யாய் என்ற அந்த தொழில்நுட்ப வல்லுநர் அளித்திருக்கும் தகவலின்படி இந்த வாகனத்தை ஏழு பேர் பயன்படுத்த முடியுமென்றும், அதில் ஐவர் பெடல் போட்டபடி செல்ல வேண்டியிருக்கும் – மற்ற இரண்டும் மாற்றுத்திறனாளிகள் அமரும்வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என தெரிகிறது. கடந்த 10 நாட்களாக உபாத்யாய் சைக்ளிங் மூலம் தான் வசிக்கும் நகரத்துக்குள் பயணித்து டெமோ காட்டியிருக்கிறார். தனக்கு ஆட்டிஸக் குறைபாடுடைய ஒரு மகன் இருப்பதாகவும், ஆட்டிஸத்துக்கும் காற்று மாசுபாட்டிற்கும் உள்ள தொடர்பே ஆட்டிஸம் என்றும் கூறியுள்ள அவர், தனது குழந்தையின் நிலை உணர்ந்தே காற்று மாசுபாட்டை தடுக்க இப்படியான கார்-ஐ உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார்.
காற்று மாசுவை குறைக்கும் நோக்கில் `சைக்ளிங்-ஐ பயன்படுத்தலாம்’ என்று பலர் நினைக்கலாம் என்றாலும், அதில் அதிகம் பேர் பயன்படுத்த முடியாது என்பதால் தான் இதை கண்டறிந்திருப்பதாக கூறியுள்ளார் ப்ரணவ். சைக்ளிங்கை பாதுகாப்பற்றதாகவும் சௌகரியமின்மையாக இருப்பதாகவும் பலரும் நினைப்பதாகவும், அவர்களுக்கு வசதியாக கார் கண்டுபிடித்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். பெடல் கார் உபயோகிப்பவர்கள், அன்றாடம் 10 கிலோமீட்டர் பயணித்தாலேவும் 350 கலோரிகள் குறைத்துக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவை மட்டுமன்றி காரில் ஒவ்வொரு சீட்டில் டிஜிட்டல் ஹெல்த் மானிட்டர் வைக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்தக் காரில் 1000W BLDC மோட்டார் இணைக்கப்பட்டிருப்பதாகவும், மணிக்கு 25 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் இதனால் செல்ல முடியுமென்றும் குறிப்பிட்டுள்ளார் அவர். இவையன்றி 400W மோனோ மெர்க் சோலார் பேனலும் காரில் இணைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பேட்டரி போல சார்ஜ் ஏற்றிக்கொள்ளமுடியுமென்று அவர் கூறியுள்ளார்.
அடுத்தகட்டமாக இந்த காரில் மூங்கில் வைத்து, பயணத்தை இன்னும் சௌகரியமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனது இந்த காரின் டிசைனை, பொதுவெளியிலேயே அறிவிக்க உள்ளதாகவும், அதன்மூலம் தேவைப்படுவோர் அனைவரும் இதை பயன்படுத்த முடியுமென்றும் கூறியுள்ளார்.
சமீபத்திய செய்தி: நிலுவை அபராதத் தொகைகளை ஆன்லைனில் வசூலிக்க சென்னை காவல்துறையின் அசத்தல் `செக்’!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM