வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்-ஜம்மு – காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள், மசூதிகள், மதரசாக்களை மீண்டும் புகலிடமாக பயன்படுத்த துவங்கிஉள்ளனர்
.காஷ்மீரில், சமீபத்தில் குல்கம், நைனா பட்போரா, சிவா கல்யாண் நகரங்களில் பயங்கரவாத வேட்டை நடந்தது. இதில், பயங்கரவாதிகள் மசூதிகளில் மத போதகர்களாகவும், மதரசாக்களில் ஆசிரியர்கள் போலவும் நடித்து, சதி திட்டங்களை செயல்படுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து பாதுகாப்பு படை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 1990களில் பயங்கரவாதிகள், காஷ்மீரில் உள்ள மசூதிகள், மதரசாக்களில் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தினர். தற்போது அந்த உத்திகளை, அவர்கள் மீண்டும் பயன்படுத்த துவங்கியுள்ளனர். அரசு மற்றும் பாதுகாப்பு படையினரின் கடும் நடவடிக்கைகளால், காஷ்மீர் மக்கள், பாக்., ஆதரவு பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தர மறுக்கின்றனர். இதனால், அவர்கள் மீண்டும் மசூதி, மதரசாக்களில் ஒளிந்து, சதிச் செயல்களை அரங்கேற்றுகின்றனர்.
சமீபத்தில் சிவா கல்யாண் நகரில் ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பைச் சேர்ந்த இரு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் மசூதிக்குள் மறைந்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இவர்களுக்கு ஜாமியா மசூதியின் முன்னாள் இமாம் மவுல்வி நசீர் அகமது மாலிக் பண உதவி செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. மாலிக் மதரசாவை நிறுவி, குழந்தைகளிடம் தவறான சித்தாந்தங்களை விதைத்து வந்துள்ளார். அவர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இது குறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, அரசு சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement