கொரோனா பரவல் துவங்கியதில் இருந்து இதுவரை லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் குவைத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறி உள்ளனர்.
தொற்று பரவல் நேரத்தில் நிலவிய கட்டுப்பாடுகளால் பலர் தங்கள் விசாவை புதுப்பிக்க முடியாமல் சொந்த நாட்டிலேயே தங்கவும் நேர்ந்தது.
இந்நிலையில் தற்போது திறமை வாய்ந்த தொழிலாளர்களுக்கு அங்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட திறன் அடிப்படையிலான தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அந்நாட்டு நாளிதழ் ஒன்று முக்கிய செய்தியாக பதிவிட்டுள்ளது.
குறிப்பாக ரமதான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில், அரபிகள் தங்கள் அங்கிகளை தைத்துத் தரும் தையல் கலைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறையால் அல்லாடி வருவதாக குறிப்பிட்டு இருக்கிறது.