கொரோனா தொற்றால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சீனாவின் ஷாங்காய் நகரில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்நகரில் நேற்று ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஷாங்காயில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அந்நகரில் 2 கோடியே 60 லட்சம் மக்கள், வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.
கொரோனா காரணமாக உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகமும் தடைபட்டுள்ளதால், அதனை சீர்படுத்த கோரி பலர் தெருவுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.