சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் பதில்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், கீதாஜீவன் பதில் தெரிவித்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்கிறது. முன்னதாக இன்று காலை கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் கூறினர்.

னியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீடு திட்டம் அலட்சியப்படுத்தப்படுவதாக உறுப்பினர் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  அலட்சியம் காட்டும் தனியார் மருத்துவமனைகள் காப்பீடு திட்டத்தில் இருந்து விலக்கி வைக்கப்படும் என்றும் அந்த  மருத்துவமனைகள் மீது சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.

சென்னை ராயபுரம் எம்.சி.சாலையில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைப்பது குறித்து  உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் நேரு,  சென்னை ராயபுரம் எம்.சி.சாலையில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைப்பது குறித்து திட்ட அறிக்கை தயாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்

மற்றொரு கேள்விக்கு பதில் கூறியவர்,  காஞ்சிபுரத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கும் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து  திருவண்ணாமலை கோயிலில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்படுமா? சட்டசபை துணை சபாநாயகர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார். அதுகுறித்து ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் நேரு கூறினார்.

விராலிமலையில் இசைப்பள்ளி தொடங்க அரசு ஆவன செய்யுமா? என அந்த தொகுதி எம்எல்ஏ கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆவன செய்ப்படும் என்று கூறியவர்,  தமிழரின் பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய கலை பண்பாட்டுத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,  17 மாவட்டங்களில் இசை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன எனவும் அமைச்சர் கூறினார்.

ங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டடங்கள் கட்டப்படுமா என உறுப்பினர்  வேல்முருகன் கேள்விக்கு எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் கீதா ஜீவன், அதற்கான அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று  பதிலளித்தார். தொடர்ந்து பேசியவர், தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்கள் உள்ளன; இதில் 7,441 மையங்கள் தனியார் கட்டடங்களில் செயல்பட்டு  என்றும் தெரிவித்தார்.

பின்னணி பாடகர் சீர்காழி கோவிந்தராஜனுக்கு சீர்காழியில் மணிமண்டபம் கட்ட திமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் கூறிய அமைச்சர் சாமிநாதன், சீர்காழி கோவிந்தராஜனுக்கு மணிமண்டபம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றவர், நிதிநிலைமைக்கு ஏற்ப மணிமண்டபம் கட்டுவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.