சிவகார்த்திகேயன் படங்களுக்கு இவ்வளவு போட்டியா?

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் எந்த ஹீரோ இருக்கிறார் எனக் கேட்டால் வியாபாரப் போட்டியைப் பொறுத்தவரையில் பலரும் சிவகார்த்திகேயனை நோக்கித்தான் கையைக் காட்டுகிறார்கள்.

அந்த இடத்திற்கான போட்டியில் சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, விக்ரம், சிம்பு, கார்த்தி, ஜெயம் ரவி, விஷால், ஆர்யா உள்ளிட்ட சிலர் இருக்கிறார்கள். ஆனால், சம்பளம், படத்தின் பட்ஜெட், படத்தைக் கைப்பற்றத் துடிக்கும் நிறுவனங்கள், வினியோகஸ்தர்கள், குழந்தைகளும் விரும்பும் ஹீரோ என சிவகார்த்திகேயன் முன்னிலையில் முந்திச் செல்வதாகச் சொல்கிறார்கள்.

அதற்கு உதாரணமாக சிவகார்த்திகேயனின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து போட்டி போட்டு வாங்கப்பட்டதைச் சொல்கிறார்கள். லைக்கா நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்து நடித்த 'டான்' படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழக வினியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது. அடுத்து சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கில் நடிக்கும் 20வது படத்தை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. இரண்டு படங்களுமே பெரிய விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

வேறு எந்த நடிகரின் படத்திற்கு இந்த அளவிற்குப் போட்டிகள் இல்லை என்றும் சொல்கிறார்கள். இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றால் சிவகார்த்திகேயனின் ரேஞ்சே தனி என்றும் ஆச்சரியப்படுகிறது திரையுலகம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.